இத்துடன் எனது அரசியல் வாழ்க்கை நிறைவு பெறும் .... ஆனாலும், புத்தளம் மக்கள் கோரிக்கை விடுத்தால் நான் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் ; ASRதனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவு பெறுவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், டெய்லி சிலோன் இனது The Expose விசேட நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தான் எவ்வித மோசடிக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சமூக மத்தியில் அதிகளவுக்கு பேசுபொருளாக தான் மாறியதாகவும் இத்துடன் தனது அரசியல் பயணம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

எனினும், தன்னை புத்தளம் பெரிய பள்ளிவாசல், சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்தளம் மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தான் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் என்றும், அது தவிர புத்தளம் மாவட்டத்தில் எவர் தேர்தலுக்கு முன்னின்றாலும் தாம் அதற்கு ஆதரவாக இருப்பதாவும் தெரிவித்தார்.

இவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கம் மற்றும் ஒரு தொகை கையடக்க தொலைபேசிகளுடன் சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
D C
இத்துடன் எனது அரசியல் வாழ்க்கை நிறைவு பெறும் .... ஆனாலும், புத்தளம் மக்கள் கோரிக்கை விடுத்தால் நான் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் ; ASR இத்துடன் எனது அரசியல் வாழ்க்கை  நிறைவு பெறும் ....  ஆனாலும்,  புத்தளம் மக்கள் கோரிக்கை விடுத்தால் நான் மீண்டும் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் ; ASR Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.