பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.



பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஜனவரி 29ஆம் திகதி முதலில் அறிவித்தார்.

அதனை எதிர்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளதாக ஆணைக்குழு தலைவர் அன்றே தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கடந்த மார்ச் 10 ஆம் திகதி, மின் கட்டணத்தை உயர்த்தும் மின்சார சபையின் முடிவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றில் ஜனக்க ரத்நாயக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வாறான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.