மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர்.



இந்தியா :
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த திங்கட்கிழமை விடுமுறைக்காக அங்குள்ள கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது விலையுயர்ந்த செல்போன்
(இந்திய ரூபாவில் 96,000) நீர்த்தேக்கத்தில் 15 அடி ஆழத்தில் விழுந்தது. விஸ்வாஸ் தனது செல்போனை தேடுமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மோட்டார் பம்ப் கொண்டு வரப்பட்டு, நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் வெறியேற்றப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை காலையில் அவரது செல்போன் மீட்கப்பட்டது.


இதுகுறித்து ராஜேஷ் விஸ்வாஸ் கூறும்போது, “ரூ.96,000 மதிப்புள்ள எனது செல்போன் நீர்த்தேக்கத்தில் விழுந்துவிட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை, துணை வட்டார அதிகாரியிடம் பேசினேன். அங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் 5 அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது” என்றார். என்றாலும் நீர்த்தேக்கத்தில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதன் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனிடையே உணவு ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸை கான்கெர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர். மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய ஆபீசர். Reviewed by Madawala News on May 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.