சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது.



பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை சுற்றிவளைத்ததாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்கள் இருவருடன் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 33,750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட், மூன்று கோடா பீப்பாய்கள், எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டர் மற்றும் வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


பண்டாரகம, ஹொரணை, பாணந்துறை, கஹதுடுவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பல்வேறு நபர்கள் ஊடாக சில காலமாக சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானம் விநியோகிக்கப் பட்டுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது. சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியது. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.