புத்தளத்தை அண்மித்த வனப்பகுதியில் வீசப்பட்ட ஒரு லட்சம் கோழி முட்டைகள்புத்தளத்தை அண்மித்த வனப்பகுதியில் ஒரு லட்சம் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான முறைப்பாடு முதலில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்ததாக அமைச்சர் தெரிவித்தார் .


புத்தளம் மஹா கும்பக் கடவில் உள்ள வல்பலுவா காப்புக்காட்டில் ( Walpaluva Reserve in Maha Kumbuk Kada, Puttalam) நேற்று 100,000 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன முட்டைகளை மொத்த முட்டை உற்பத்தியாளர்கள் கொட்டியுள்ளதாக புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
புத்தளத்தை அண்மித்த வனப்பகுதியில் வீசப்பட்ட ஒரு லட்சம் கோழி முட்டைகள் புத்தளத்தை அண்மித்த வனப்பகுதியில் வீசப்பட்ட ஒரு லட்சம் கோழி முட்டைகள் Reviewed by Madawala News on March 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.