பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது.



துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் தேர்தல் மைய அரசியலைச் செய்து வருவதால், நாடு குட்டிச்சுவராக மாறி இருக்கின்றது. இதிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால், தேசத்தை மையமாக வைத்து, தேச மைய அரசியலை செய்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எஸ்.எம். எம் முஷரப் தெரிவித்தார் .


காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஐந்து வருடங்களுக்கு பிற்பாடு புதன்கிழமை (15) காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் வழிகாட்டலில் முஷரப் எம்.பி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .


இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்

பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. இராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேலும் பேசுகையில் கூறியதாவது:


அபிவிருத்திக்கு முன்னர், இனங்களிடையே பரஸ்பரம் ஒற்றுமை நிலவ வேண்டும். பிரச்சினைகள்

விடுத்து, தீர்வை வழங்கக்கூடிய எதையும் செய்ய வேண்டும்.

சகல இனங்களும் தேச அபிமானத்துடன் வாழ்ந்தால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீளலாம்.

தேச மைய அரசியல் வேண்டும்.

தேர்தலுக்காக இனவாதத்தை பேசி, அரசியல் செய்வதால் நீண்ட காலமாக பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

பிரச்சினைகளைப் பேசிப் பேசி காலம்கடத்தாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும்.


பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. ஆனால், சில இடங்களில் பைத்தியக்காரனும் கத்துகிறான்; வைத்தியரும் கத்துகிறார். எனவே, நாங்கள் பிரச்சினையை பேசிப் பேசி காலத்தை கடத்தாமல், தீர்வை நோக்கி கூட்டங்களை நடத்த வேண்டும் என்றார்.
பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. பைத்தியக்காரன் கத்துகின்றான் என்பதற்காக, அதற்கு சிகிச்சை செய்கின்ற வைத்தியரும் கத்த முடியாது. Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.