கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன.



கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 90% மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. Reviewed by Madawala News on March 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.