இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்ட விபரம்..
மார்ச் 20 அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அனுமதியால் $ 2.9 பில்லியன் கடன் கிடைக்க உள்ளது.
அடுத்ததாக உலக வங்கி ஏற்கனவே $1.5 பில்லியன் வழங்க உறுதியளித்துள்ளது,
மேலும் ஆசிய அபிவிருந்தி வங்கி (ADB) $1 பில்லியன் உதவியை இலங்கைக்கு வழங்கும்.
அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் (SOEs) மறுசீரமைப்பு மூலம் $3 பில்லியன் திரட்டப்படும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த நிதி வசதிகளின் திட்டங்களை சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்கத் தொடங்கிய பின்னர், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை கட்டியெழுப்புவது உடனடியாக ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 8.4 பில்லியன் டொலராகிறது !
Reviewed by Madawala News
on
March 12, 2023
Rating:

No comments: