50 டாலரில் இந்தியா சென்று 100 கிலோ பொருட்களை கொண்டுவரும் இலங்கை - இந்திய கப்பல் திட்டம் ஆரம்பகிறது.இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையே 2023 ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவையை தொடங்க இலங்கை மற்றும் இந்திய அரசுகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்காக காங்கேசன்துறை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று வீதம் இரண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இந்த  சேவைக்காக இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களால் முதலில்  பயணிகள் கப்பல் வழங்கப்படாது, மாறாக இந்திய வெளிவிவகார அமைச்சினால் கோரப்பட்ட டெண்டரின் கீழ்  பயணிகள் கப்பல்  வழங்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


புதிய  பயணிகள் கப்பல் திட்டத்தின் கீழ், ஒரு கப்பல்  மொத்தம் 150 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், ஒவ்வொரு பயணிக்கும் *அனுமதிக்கப்பட்ட சாமான்களின் எடை 100 கிலோ இருக்கும்,

*அதே சமயம் ஒரு வழி பயணத்தின் விலை US

$ 50 ஆகும். 

50 டாலரில் இந்தியா சென்று 100 கிலோ பொருட்களை கொண்டுவரும் இலங்கை - இந்திய கப்பல் திட்டம் ஆரம்பகிறது. 50 டாலரில் இந்தியா சென்று 100 கிலோ பொருட்களை கொண்டுவரும் இலங்கை - இந்திய கப்பல் திட்டம் ஆரம்பகிறது. Reviewed by Madawala News on March 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.