100 - 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.இலங்கையில் அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வாகன இறக்குமதிக்கான தடை குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

100 முதல் 150 வரையபன பொருட்களின் இறக்குமதிக்கு தடைநீக்கம் செய்யப்படுவதால், அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் அவை தாக்கத்தை ஏற்படுத்தாது.

எனினும் வாகன இறக்குமதியின்போது ஆண்டுக்கு குறைந்தது இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படுவதால், அது வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே வாகன இறக்குமதி கட்டுப்பாடு தொடரும் என்று திறைசேரியின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், எழுதுபொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், தோல் சார்ந்த உற்பத்தி பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரிபாகங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் குளியலறை பொருட்கள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் என்பவை இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களில் அடங்குகின்றன.

எனினும் மத்திய வங்கி, கைத்தொழில் அமைச்சு மற்றும் திறைசேரி என்பன கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் அளவை தீர்மானிக்கும் என திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100 - 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. 100 - 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. Reviewed by Madawala News on March 26, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.