குத்து சண்டை போட்டிகளில் அபார சாதனைகளை அள்ளிக் குவிக்கும் உடுநுவர இரட்டை வீரர்கள்



இலங்கை ஜீத்-குன்-டூ பெடரேஷன் அமைப்பினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான குத்து சண்டை சாம்பியன் போட்டியில் கெலிஓயாவை சேர்ந்த IMA அணி வீரர்களான இரட்டை சகோதர்கள் அஹமத் அலி, முஹம்மத் அலி ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை சுவீகரித்து தொடர்ந்து அபார சாதனை படைத்துள்ளனர்.


2023 ශ්‍රී ලංකා JEET KUNE - DO CHAMPIONSHIP සම්මේලනය විසින් සංවිධානය කරන ලද ජාතික බොක්සිං ශූරතාවලියේ ගෙලිඔයා IMA කණ්ඩායමේ නිවුන් සහෝදරයන් වන අහමඩ් අලි සහ මුහම්මද් අලි රන් සහ රිදී පදක්කම් දිනා ගනී..

இவ் விசேட போட்டி நிகழ்வு தேசிய ஜீத்-குன்-டூ பெடரேஷன் அமைப்பின் தலைவர் கெவின் நிசாந்த அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 28-29 ஆம் திகதிகளில் கண்டி திகனை மாகாண விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

18 வயதுக்கு மேட்பட்டோருக்கான 85 - 90kg எடை பிரிவுக்கு இடையே இடம்பெற்ற குத்து சண்டை இறுதிப்போட்டியில் கண்டி JKD அணி வீரரான குணரத்ன என்பவரை எதிர்த்து சண்டையிட்ட கெலிஓய சேந்த இளம் வீரர் அஹமத் அலி போட்டியில் அவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தினை சுவீகரித்து இவ் ஆண்டுக்கான சாதனையை படைத்துள்ளான்.

குறித்த அஹமத் அலி கடந்த 2020 ஆம் ஆண்டும் தேசிய ரீதியில் நடைபெற்ற மூன்றாம் “முஆயி தாயி” குத்து சண்டை போட்டியிலும் இறுதிப்போட்டி வரை சென்று பங்கு பற்றி வெண்கல பதக்கத்தினை வெற்றிகொண்டு அணிக்கான பெருமையை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 2023 ஜீத்-குன்-டூ சாம்பியன் போட்டியில் முஹம்மத் அலி 75 - 80kg எடை பிரிவுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் கண்டி JKD அணி வீரரான வீரசேகரவை திர்கொண்டு அரையிறுதி வரை சென்று அதில் களமிறங்கி சண்டையிட்டு வெள்ளி பதக்கத்தை வெற்றிகொண்டு இவ் ஆண்டுக்கான பெருமையை சேர்த்துள்ளார்.

மேலும் குறித்த முஹம்மத் அலி கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் இடம்பெற்ற இரண்டாம் “முஆயி தாயி” சாம்பியன் போட்டியில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கத்தினை வெற்றிகொண்டு முழு ஊருக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக குத்து சண்டை போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகளை படைத்துவரும் இவ் இரு இரட்டை சகோதர்களும் முழு உடுநுவரை விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் இருவரினதும் விளையாட்டு துறை வளர்ச்சிக்கு பின்னால் IMA அமைப்பின் குத்து சண்டை பயிற்றுவிப்பாளர் MHM பாஹித் மாஸ்டரின் பயிற்ச்சியும் பங்களிப்பும் அளப்பெரும் வரவேற்கத்தக்கது.

இவ் அமைப்பின் பயிற்றுவிப்பாளருக்கும்
மேலும் எதிர்காலத்தில் பல சாதனைகளை குவிக்க இருக்கும் இவ் இரு இரட்டை வீரர்களுக்கும் எமது  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


-
குத்து சண்டை போட்டிகளில் அபார சாதனைகளை அள்ளிக் குவிக்கும் உடுநுவர இரட்டை வீரர்கள் குத்து சண்டை போட்டிகளில் அபார சாதனைகளை அள்ளிக் குவிக்கும் உடுநுவர  இரட்டை வீரர்கள் Reviewed by Madawala News on February 02, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.