அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமையும்.உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தை உறுதி செய்வோம் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான்,

அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமையும் எனவும் தெரிவித்தார்.


நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான முதலாவது போராட்டமாக பயன்படுத்தப்போகிறோம். 


கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை உறுதி  செய்துகொண்டு, கொழும்பில்  வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். 


எரிபொருள் தொடர்பிலும் அதில்  இடம்பெற்று வந்த ஊழல் தொடர்பிலும்  அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின்  ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித கைது  செய்யப்பட்டுள்ளார்.


அரசாங்கத்துக்கு இவர் பெரும் தலையிடியாக இருந்தார். ஆனந்த  பாலிதவை கைது செய்து போராட்டத்தை நிறுத்திவிட முடியாது. 


150 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியே கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்வதாக தற்போதைய மேயர் கூறியிருக்கிறார். அது தவறு.


ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடக்கூட ஒருவர் இல்லை. இதனாலேயே மொட்டுடன்  இணைந்து போட்டியிட்டுள்ளனர்.

ஐ.தே.க வங்குரோத்தடைந்துள்ளது.


இவர்களது  கட்சியில் வேட்பாளர் கூட இல்லாத நிலையே காணப்படுகிறது என்றார். 


கொழும்பு நகரம் வளர்ச்சியடையும்போது  நாடும் வளர்ச்சியடையும். நாட்டு  மக்களை அபிவிருத்தியடையச் செய்யும்  வேலைத்திட்டங்களை கொழும்பில்  ஆரம்பிப்போம் எனவும் தெரிவித்தார். 
அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமையும். அரசாங்கத்தை  விரட்டியடிக்கும்  போராட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்  அமையும். Reviewed by Madawala News on January 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.