வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைது ; ஏராளமான கோடா மற்றும் கசிப்பு சிக்கியது.வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைது ; ஏராளமான கோடா மற்றும் கசிப்பு சிக்கியது.

யாழ்.தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண் நேற்று முன்தினம்(22.01.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது 40 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 15,750 மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைது ; ஏராளமான கோடா மற்றும் கசிப்பு சிக்கியது. வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் கைது ; ஏராளமான கோடா மற்றும் கசிப்பு சிக்கியது. Reviewed by Madawala News on January 24, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.