ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் - ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரை பலப்படுத்த வேண்டும்.(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரை பலப்படுத்தும் வகையில் அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சி கட்சிகளின் செயலாளர்கள, பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (24) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் செலவீனம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. ஊழலற்ற வகையில் சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியது.

தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் தீர்வு காண முடியும் ஆகவே நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் அவரை பலப்படுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு வெகுவிரைவில் தீர்வு காண்பது அவசியமாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அனைத்து அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பொருளாதார நெருக்கடியுடன் தான் போட்டி உள்ளதே தவிர, அரசியல் தரப்பினருடன் எவ்வித போட்டியும் இல்லை என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் - ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரை பலப்படுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் - ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரை பலப்படுத்த வேண்டும். Reviewed by Madawala News on January 25, 2023 Rating: 5

1 comment:

  1. இந்த ரங்கே பண்டார என்ற நபரை உடனடியாக கைது செய்து மனநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கி உடனடியாக மருத்துவம் செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.