இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு



-ஹஸ்பர் _
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (21) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அப்பகுதி இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். வளவாளராக தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி Dr.மலர்விழி கலந்து கொண்டார்.

மேலும் தம்பலகாமம் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.டி.பாயிஸ் ,இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  இளவயது  திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.