பம்பலப்பிட்டியில் உள்ள ஆடைக் கடையில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மற்றொரு வாகனம் தமது வாகனத்திற்கு பின்னால் இடையூறாக நின்றதால், வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாத நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாடிக்கையாளர் தனது வாகனத்தை எடுக்க முடியாமை தொடர்பில் ஊழியர்களிடம் தெரிவித்ததையடுத்து, இடையூறாக இருக்கும் வாகனத்தை நகர்த்துவதற்கு கடையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
எனினும் வாடிக்கையாளர் பொறுமை இழந்து கடையின் மேலாளரை திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சில ஊழியர்கள் வாடிக்கையாளரை இரக்கமின்றி தாக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
சம்பவத்தில் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பின் பிரபல ஆடையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் - நடந்தது என்ன என்ற விபரம் வெளியானது.
Reviewed by Madawala News
on
January 23, 2023
Rating:

No comments: