ஸ்ரீலங்கன் விமான சேவையின் 42 விமானிகள் ராஜினாமா செய்தனர் - 85 விமானிகள் ராஜினாமாவுக்கு தயார் நிலையில்..ஸ்ரீலங்கன் விமான சேவையின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜினாமா கடிதங்களை கையளித்ததாகவும், 85 விமானிகள் விமான போக்குவரத்து அதிகாரசபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானி ஒருவர் மாத சம்பளம் சுமார் 10,000 டொலர் பெறுகிறார், ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபாய் என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது, மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானி 30,000 டொலர் முதல் 40,000 டொலர்வரை வரியில்லா சம்பளம் பெறுகிறனர் என்று அந்த அதிகாரி கூறினார்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் சுமார் 240 விமானிகள் பணிபுரிவதாகவும், சுமார் 80 விமானிகள் வெளியேறினால், இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் விமான நிறுவனம் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், கடந்த டிசம்பர் மாதம் முதல் டொலர் 295 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் 42 விமானிகள் ராஜினாமா செய்தனர் - 85 விமானிகள் ராஜினாமாவுக்கு தயார் நிலையில்.. ஸ்ரீலங்கன் விமான சேவையின் 42 விமானிகள் ராஜினாமா செய்தனர்  - 85 விமானிகள்  ராஜினாமாவுக்கு தயார் நிலையில்.. Reviewed by Madawala News on January 27, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.