2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர்.



வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்திருந்ததாக குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.


அதேவேளை கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதிகளை வழங்க அறவிடப்பட்ட கட்டணங்கள் மூலம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கடந்த ஆண்டு 20.1 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 18.05 பில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை விட மேலதிகமான வருமானத்தை பெற முடிந்தது.



இரட்டை குடியுரிமை வழங்குதல் மற்றும் விமான நிலைய சேவைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் இந்த வருமானத்தை பெற முடிந்தது.

இதனிடையே எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தற்போது விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு நவீனமயப்படுத்தப்பட்டு, இலத்திரனியல் வகை கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்கான தொழிற்நுட்ப குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட உள்ளன எனவும் எனவும் ஹர்ச இலுக்பிட்டிய கூறியுள்ளார்
2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர். 2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர். Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.