விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா?



விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா? 🛑
இதுவரை 3 பதிவு செய்யப்பட்ட சத்திர சிகிச்சைகள் மாத்திரமே. ஏன்⁉️
By: Dr. Ziyad Aia

நவீன மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியுடன் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகள் பல சாத்தியமாகி வருகின்றன.

இருப்பினும் இந்த விஜய் மாற்று சத்திர சிகிச்சைகள் பொதுவாக செய்யப்படுவதில்லை.

முதலில் விதை மாற்று சத்திர சிகிச்சைகள் ஏன் தேவைப்படுகின்றன⁉️

💓 01. பிறவியிலேயே விதை இன்றி பிறத்தல்.

💓 02. விபத்துக்களால் / Cancerஆல் விதைகள் இழக்கப்படல்.

💓 03. Transgender surgeries: பெண் ஆணாக மாறும் சத்திர சிகிச்சை.
என்பவற்றை கொள்ளலாம். 

இது தவிர விந்து உற்பத்தி இன்மை, ஓமோன் (Testesterone) இன்மை என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால் இவற்றுக்காக சத்திர சிகிச்சை செய்யப்படுவதில்லை.

Testis Traplantஇல் உள்ள பிரச்சினை யாருடைய Testis Transplant பண்ணப்படுகிறதோ அவரின் DNA யினையே பிறக்கும் குழந்தை கொண்டிருக்கும். 

அதாவது விந்து உற்பத்தியின்போது Donorஇன் Germinal Cellsஇல் இருந்தே விந்து உற்பத்தி ஆவதால் இந்த குளறுபடி. 

இந்த Ethical issue காரணமாக Testicular Transplant பொதுவாக செய்யப்படுவதில்லை. 

✅ விபத்து போன்ற சம்பவங்களில் விதை இழக்கப்பட்டால் / Transgender surgeries: செயற்கையான விதைகள் (Prosthetic Testis) வைத்து சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. 

✅ அதேபோல் விதைகளால் சுரக்கப்படும் Testesterone Hormon குறைவாக / சுரக்கப்படாமல் விடுமிடத்து அதற்கும் மருந்துகள் (Hormone Replacement Therapy) உண்டு. 

✅ குழந்தைப்போறுக்கு Sperm Donation உண்டு. 

இப்படி பல மாற்று வழிகள் உள்ளதால் Testis Transplant செய்யப்படுவதில்லை. 

உலகின் முதலாவது Testis Transplant 1978இல் மேற்கொள்ளப்பட்டது.
ஒத்த இரட்டையர்களாக பிறந்த குழந்தைகளில் ஒரு குழந்தை விதைகள் இல்லாமல் பிறந்ததால் மற்றைய குழந்தையின் இரண்டில் ஒரு விதை இக்குழந்தைக்கு மாற்றீடு செய்யப்பட்டது. 

அதேபோல் இறுதியாக 2019இல் Serbia வைச் சேர்ந்த 36 வயதுடைய விதைகள் இன்றி பிறந்து வளர்ந்த இளைஞனுக்கு அவனது ஒத்த இரட்டையரான சகோதரனின் விதைகளில் ஒன்று மாற்றீடு செய்யப்பட்டது. 

இவ்வாறு 3 Caseகளே பதிவாகி உள்ளன. 

இது இவ்வாறு இருக்க இலங்கையில் Accused ஒருவனின் Statement Sinhala Media ஒன்றில் செய்தியாகி வைரலாகி வருகிறது.
By: Dr Ziyad Aia

தொடர்பான தமிழ் செய்தி:
விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா? விதை மாற்று அறுவைச் சிகிச்சைகள் (Testicular Transplant) சாத்தியமா? Reviewed by Madawala News on December 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.