பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் ; அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளிப்பு.



இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளது.

தமது சந்திப்பின் போது, உலக காலநிலை விடயங்கள், அதில் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள், அதற்கான அமரிக்காவின் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி இலங்கை சார்பில் நன்றியை தெரிவித்தார்
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் ; அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளிப்பு.  பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்கும் ; அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளிப்பு. Reviewed by Madawala News on December 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.