பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது!



பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள்.
போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது!

கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்

போதைப்பொருள் கலந்த மற்றும் மாத்திரைகள் எனப் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து எமது பிள்ளைகளைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் உள்ள பல்வேறு சவால்களை நிறுத்த முயற்சி செய்தல் வேண்டும்.

போதைவஸ்து கலந்த இனிப்பு பண்டங்கள், மாத்திரைகள் என பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைந்துள்ளன. பெற்றோர்கள் இதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு இது பற்றி கூறுங்கள்.

பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள். பிள்ளைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், இதனால் பிள்ளைகள் மீது அவநம்பிக்கை ஏற்படக் கூடாது. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது, ​​வகுப்பிற்குச் செல்லும்போது பழகும் நண்பர்கள், சனி, ஞாயிறு தினங்களில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்லும் போது யாருடன் பழகுகிறார்கள் என்பதையும் தொடர்ந்து அறிந்தும் அவதானமாகவும் இருங்கள். பாடசாலைக்கு செல்லும்போது என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொண்டால், பிள்ளைகள் போதைக்கு அடிமையாக மாட்டார்கள். எனவே, எவ்வளவு வேலைகள் அதிகாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவதானித்துக் கொள்ள வேண்டும்.

*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்*
பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது!  பெற்றோர்களே பிள்ளைகள் மீது அவதானமாக இருங்கள். போதைப் பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் பாடசாலையினுள் நுழைந்து விட்டது! Reviewed by Madawala News on December 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.