தென் கொரியாவில் உயிரிழந்த முகம்மத் ஜினாத்தின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக, ஒன்பது மில்லியன் ரூபாவை வழங்க இணக்கம்.
கொரியாவில் உயிரிழந்துள்ள கண்டியைச் சேர்ந்த இளைஞனின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக, ஒன்பது மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு கொரிய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்
அலிசப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரியாவில் உயிரிழந்த கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த இளைஞனுக்கு (முகம்மத் ஜினாத் ) நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என, லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர்,கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் உடலை கொரிய தூதரகத்தின் உதவியுடன் நான்கு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது. அதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக கொரிய தூதரகத்துடன் நாம் கலந்துரையாடினோம்.இதன் பயனாக ஒன்பது மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையை வழங்க அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்
அதேபோன்று ஜனாசாவை நாட்டுக்கு கொண்டுவர ஏற்பட்ட செலவையும் கொரிய தூதரகம் ஏற்றுக்கொளளை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்

இந்த வௌிநாட்டு அமைச்சரின் பேச்சைக் கேட்கும் போது சிரிப்புத்தான் வருகின்றது. போஸ்ட்மன் சேவை செய்ய எமக்கு ஒரு வௌிநாட்டு அமைச்சர் தேவையில்லை. அந்த தபால்காரன் பணியை இந்த அமைச்சரிடமிருந்து அரசாங்கமோ பொதுமக்களோ குறிப்பாக இந்த காலம்சென்ற இளைஞனின் உறவுகளோ அத்தகைய போஸ்ட்மன் சேவையை அவரிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. கொரிய அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்த பணம் அந்த குடும்பத்துக்கு சரியாகக் கிடைக்கும். அது பற்றி பாரளுமன்றத்தில் வம்பளந்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. நடைபெற வேண்டியது இதுதான். இலங்கை அரசாங்கம் வேலைக்காக கொரியா சென்ற ஒரு இலங்கையரின் உயிரை அநியாயமாக இழப்பதற்குக் காரணமான சம்பவம் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. எனவே அந்த செயல்பாடு ஓர் உயிரைக் கொலை செய்வதற்குச் சமம். எனவே இலங்கை அரசு சரியான சட்ட ஆலோசனைகளுடன் கொரிய அரசாங்கத்துக்கு எதிராக வழக்கொன்றைப் பதிவு செய்து 100 கோடி இழப்பை வேண்டினால் நிச்சியம் நீதிமன்றத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவருக்குச் சார்பாக கிடைக்கும். அப்போது எந்த முன் நிபந்தனைகளுமின்றி கொரிய அரசாங்கம் அந்தப் பணத்தை உரியவர்களுக்கு வழங்கும். அதைவிட்டு எந்த உரிமைக் கோரல்களுமின்றி வெறுமனே கொரிய நிறுவனங்களின் தீர்மானப்படி அந்த 9 மில்லியன் ரூபா வழங்கப்படுகின்றது. அது பற்றி பெருமை பேச இந்த அமைச்சருக்கு என்ன தகுதியிருக்கின்றது. இந்த துரதிருஷ்டமான இழப்பு ஒரு பிலிப்பைன்ஸ் நபருக்கு நடந்திருந்தால் அவர்கள் 1000 கோடி நட்டஈடாக கோருவார்கள். அந்த முதுகெழும்பும் சிந்தனையும் இந்த கேடு கெட்ட அரசாங்கத்திடம் இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவிட்டுவிட்டு பெரிய பெருமையுடன் பேசும் இந்த வௌிநாட்டு அமைச்சரும் எந்தவிதமான தூரநோக்கோ திட்டங்களோ இன்றி போலி அரசியல் செய்து நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற දෙසිය විසිපහෙන් ஒருவராக நின்று யாரை இவர் திருப்திப்படுத்துகின்றார் என்பது தெரியாது.
ReplyDelete