கிராமத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம்.



- கந்தளாய் யூசுப் -

அனுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட முக்குர குளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள் .


ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தென்னை வாழை சோளம் பயிரிடப்பட்டுள்ளது .


இக் கிராமத்தில் யானை வேலி இல்லாத காரணத்தினால் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது .


இன்று (22) அதிகாலை தோட்டத்தித்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியும் வேறோடு சாய்த்தும், காய்த்திருந்த மா மரத்தின் கிளைகளை ஒடித்து முற்றாக சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வாழை மரங்களையும் பிடிங்கியுள்ளது.


சுமார் 4 யானைகளுக்கு மேல் வந்து இவ்அட்டகாசத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


 ,ஒவ்வொரு நாளும் காட்டு யானைகள் தோட்டப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தால் மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவெரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.

கிராமத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம். கிராமத்தில்  புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம். Reviewed by Madawala News on November 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.