ட்விட்டர் நிறுவனத்தின் சகல அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் ; எலோன் மஸ்க்



ட்விட்டர் நிறுவனத்தினை கையகப்படுத்தியதில் இருந்தே, ட்விட்டர் ஊழிர்களையும், பயனர்களையும் மிக பர பரப்பாக வைத்துள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டரின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற பதற்றத்தின் மத்தியில் ட்விட்டர் அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆக்சஸ் கார்டுகள் வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.



ட்விட்டர் நிறுவனத்தின் சகல அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் தனது ஊழியர்களிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

பிபிசி  ஒரு குறுஞ்செய்தியில்,
நவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ட்விட்டர் தெரிவிக்கவில்லை.

"அதி தீவிரமாக நீண்ட நேரம்” பணியாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று ஈலோன் மஸ்க் தெரிவித்ததை அடுத்து, ஏராளமான ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதே வேளை
ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் செய்தியொன்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் சின்னத்தை புதைகுழியில் அடக்கம் செய்துள்ளதைப் போன்ற புகைப்படமொன்றை ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளமையானது பயனாளர்கள் இடையே பெரிதும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரின் செயற்பாடுகள் நிரந்தரமாகவே முடங்கிவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் நிறுவனத்தின் சகல அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் ; எலோன் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தின் சகல அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் ; எலோன் மஸ்க் Reviewed by Madawala News on November 18, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.