சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என ஏமாற்றி நீல இரத்தினக்கல் மோசடி செய்த பிரபல நடிகையின் பிரதிநிதி கைது. 

வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்தி நீல நிற இரத்தினக்கல்லை மோசடி செய்தார் என கூறப்படும் சம்பவம் தொடர்பில்   கைது செய்யப்பட்டவர் பிரபல தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா குமாரி பெரேராவின் முகவரான தொலைக்காட்சி நாடக நடிகர்  என  லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் வேடத்தில்  பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவரும் மினுவாங்கெட்ட வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.எம். குணரத்ன பண்டார என்ற நபராவார்.


நடிகை மஞ்சுளா குமாரி பெரேரா, லக்கல தேவலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுரங்க அகழ்வு  ஒப்பந்தம் ஒன்றில்  கைச்சாத்திட்டுள்ளார், 


இந்த  நடிகையின் பிரதிநிதியே சந்தேகத்தில் கைதான  துணைத் தொலைக்காட்சி நடிகராவார். இவரே வவுனியாவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை பல  மாதங்களாக பிரதேசவாசிகளிடம் கூறி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என ஏமாற்றி நீல இரத்தினக்கல் மோசடி செய்த பிரபல நடிகையின் பிரதிநிதி கைது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என ஏமாற்றி நீல  இரத்தினக்கல் மோசடி செய்த பிரபல நடிகையின் பிரதிநிதி கைது. Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.