அதிகாலையில் மலையக பிரதேசம் போல் காட்சி தரும் அம்பாறை மாவட்டம்.(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக  அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது. 


இதனால் மாவட்டத்தில் பிரதான  வீதியால் செல்லும் வாகன சாரதிகள், பொதுமக்கள், போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக இந்த பனி மூட்டம் அதிகாலையில் இருந்து சுமார் 7 தொடக்கம் 8 மணி வரை நீடிக்கின்றது.


அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு ,

நிந்தவூர்,ஒலுவில், பாலமுனை,  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில்  போன்ற பல  பிரதேசங்களிலும் அதிகமாக காணப்படுகிறது.


எஸ்.அஷ்ரப்கான்

அதிகாலையில் மலையக பிரதேசம் போல் காட்சி தரும் அம்பாறை மாவட்டம்.  அதிகாலையில் மலையக பிரதேசம் போல்  காட்சி தரும் அம்பாறை மாவட்டம். Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.