இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம்... இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் ; மத்திய வங்கி ஆளுநர்



இலங்கையில்
முதலீடுகளை
செய்ய நினைக்கும்
முதலீட்டாளர்களுக்கு
இதுதான் சரியான
சந்தர்ப்பமாகும்.


இப்போது
முதலீடுகளை செய்தால்
வெகு விரைவில் அதற்கான
பிரதிபலன் கிடைக்கும்
என மத்திய வங்கியின்
ஆளுநர் நந்தலால் வீரசிங்க
தெரிவித்துள்ளார்.


தேசிய மற்றும் சர்வதேச
முதலீட்டாளர்களுடனான
சந்திப்பில் அவர் இதனை
தெரிவித்துள்ளார். அவர்
மேலும் கூறுகையில்,
தற்போது நாடு
எதிர்கொண்டுள்ள நெருக்கடி
நிலைமையில் இருந்து
அடுத்த ஆண்டு விடுபட
முடியும். வறுமை குறைந்த
அதேநேரம் வளங்கள்
அதிகரிக்கும் இஸ்திரமான
பொருளாதாரத்துடன் எமது
வேலைத்திட்டங்களை
ஆரம்பித்து, அடுத்த
சில ஆண்டுகள் எம்மால்
முன்னோக்கி செல்ல முடியும்
என நினைக்கின்றோம்.
இலங்கையில் முதலீடுகளை
செய்ய நினைக்கும் நபர்களுக்கு
நான் கூறுவது என்னவென்றால்
இதுதான் உங்களுக்கு சரியான
சந்தர்ப்பமாகும்.


உங்களுக்கான
பங்குகளை பெற்றுக்கொள்ள
சரியான நேரம் வந்துள்ளது என பொறுப்புடன் கூறுகின்றேன்.


நீங்கள் இங்கு முன்னெடுக்கும்
முதலீட்டின் பெறுமதியை
பாருங்கள். அதே போல் இந்த

முதலீடுகளின் மூலமாக
கிடைக்கும் வருமானம் மற்றும்
காலம் என்பவற்றை கருத்தில்
கொள்ளுங்கள். இப்போது
முதலீடுகளை செய்தால்
வெகு விரைவில் அதற்கான
பிரதிபலன் கிடைக்கும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் டிசம்பர்
மாதம் இலங்கை சர்வதேச
நாணய நிதியத்தின் இலக்கை
தவறவிட்டாலும் ஜனவரி
மாதம் நம்பிக்கையுடனும்
எதிர்பார்ப்புடனும் இருக்க
முடியும்.


அப்படி நடந்தால்
சர்வதேச நாணய நிதியத்திடம்
இருந்து 2.9 பில்லியன்
அமெரிக்க டொலர் நிதி
நிவாரணம் பெற்றுக்கொள்ள
முடியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம்... இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் ; மத்திய வங்கி ஆளுநர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம்...  இப்போது முதலீடுகளை செய்தால் வெகு விரைவில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் ; மத்திய வங்கி ஆளுநர் Reviewed by Madawala News on November 29, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.