கட்டார் உலகக்கிண்ண கட்டுமான பணிகளின் போது 6500 முதல் 15000 பேர் வரை உயிரிழந்தார்களா? மொத்தம் 3 பேர் தான் என்கிறது கத்தார் அரசு? எது உண்மை?



#FactCheck Qatar World Cup தயார் படுத்தலில் எத்தனைபேர்
 உயிரிழந்தனர்⁉️

6500 - 15000 என்கிறது சர்வதேச ஊடகங்கள்.
நேரடியாக இறந்தவர்கள் மூவரே என்கிறது கத்தார் அரசு? எது உண்மை என்ற அலசல்.

கத்தாரில் உலகக் கோப்பை நெருங்கி வருவதால் (11/16/2022 இல் வெளியான பதிவு), விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் கால்பந்தாட்டப் போட்டி தொடர்பாக 6,500 பேர் தொடக்கம் 15,000 பேர்வரை இறந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை சரியானதா
⁉️

2022 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை கத்தார் வென்றது முதல் வெளிநாட்டு பணியாளர்களை நடத்துவது, மற்றும் நிகழ்வின் மனித செலவுகள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானத் தளங்களில் எத்தனை தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்பது குறித்து பல்வேறு மதிப்பீடுகள் உள்ளன, ஆனால் உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவது கடினம்.

இந்த உண்மைச் சரிபார்ப்பு (fact check) FIFA, கத்தார் அதிகாரிகள், மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஊடகங்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களைப் பார்க்கிறது.

அவற்றில் சில உண்மை, சில தவறாக வழிநடத்துபவை அல்லது தவறானவை என்று முடிவுகள் கிடைக்கின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்ததாகக் கூறப்படும் துன்பங்களின் தெளிவற்ற தோற்றத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன என்பதை ஆசிரியரின் ஆய்வு கூறுகிறது.

🛑 Claim: "கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் 6,500 - 15,000 - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்."

💓 DW fact check: False (தவறு)

2021 ஆம் ஆண்டு Amnesty International அறிக்கைப்படி கத்தாரில் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடர்பாக 15,021 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்ததாக பரவலாகப் புகாரளிக்கப்பட்டது.

அதேபோல் 2021 பிப்ரவரியில் The Guardianனால் வெளியிடப்பட்ட 6,500 என்ற எண்ணிக்கை பரவலாகப் பேசப்பட்டது. (ஆதாரங்கள் இணைப்பில்)

இந்த அறிக்கைகள் வெளியிடப் பட்டதிலிருந்து இந்தக் கூற்றை ஆதாரம் காட்ட இந்த புள்ளிவிவரங்கள் பலமுறை பயன்படுத்தப்பட்டாலும், சர்வதேச மன்னிப்புச் சபையோ (Amnesty International) அல்லது The Guardianனோ இந்த மக்கள் அனைவரும் மைதான கட்டுமானத் தளங்களிலோ அல்லது 2022 உலகக் கோப்பை சம்பந்தமான காரணங்களினாலோ இறந்ததாகக் கூறவில்லை.

இரண்டு புள்ளிவிவரங்களும் கடந்த 10 வருடங்களில் கத்தாரில் இறந்த பல்வேறு தேசங்களை சேர்ந்த மற்றும் பல்வேறு தொழில்துறைகளை செய்யும் கத்தார் அல்லாதவர்களை மட்டுமே குறிக்கின்றன.

Amnesty International மேற்கோள் காட்டிய 15,021 எண்ணிக்கையானது, கத்தார் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களிலிருந்து பெறப்பட்டது. மேலும் அது 2010 மற்றும் 2019 க்கு இடையில் அந்த நாட்டில் இறந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

2011 மற்றும் 2020 க்கு இடையில், இது 15,799 ஆக இருந்தது.

✅ 15,000 பேர் இறந்தனர் - ஆனால் உலகக் கோப்பைக்காக மட்டுமல்ல

உலகக் கோப்பை தொடர்பான திட்டங்களில் வேலை செய்யாத poorly-qualified கட்டுமானத் தொழிலாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், வீடு/தோட்டத் தொழிலாளர்கள், வெளிநாட்டு ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற வணிகர்கள் என பலரும் இதில் அடங்குவர்.

பலர் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளிலிருந்து வந்தவர்கள், மற்றவர்கள் நடுத்தர அல்லது அதிக வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள். கத்தார் புள்ளிவிவரங்கள் மேலும் இதுதொடர்பான விரிவான தகவல்களை வழங்கவில்லை.

The Guardianனைப் பொறுத்தவரை, பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பத்திரிகையாளர் Pete Pattisson மற்றும் அவரது குழுவினர் தங்கள் மொத்த எண்ணிக்கை 6,751 என குறைந்த தகுதியுள்ள தொழிலாளர்கள் (poorly-qualified workers) இறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கருதுகின்றனர்.

கத்தார் இதில் எந்த எண்ணிக்கையையும் மறுக்கவில்லை. உண்மையில், The Guardianக்குப் பதிலளிக்கும் வகையில், அந்நாட்டின் அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் கூறியதாவது:

"ஒவ்வொரு உயிர் இழப்பும் வருத்தமளிக்கிறது என்றாலும், இந்த சமூகங்களில் (வெளிநாட்டினர்) இறப்பு விகிதம் மக்கள் தொகையின் அளவு மற்றும் மக்கள் தொகைக்கு எதிர்பார்க்கப்படும் இறப்பு வகித வரம்பிற்குள் உள்ளது." என்று தெரிவிக்கிறது." என தெரிவித்தது.

ஆனால் அது உண்மையா⁉️

🛑 Claim: "இந்த வெளிநாட்டினரின் இறப்பு விகிதம் மக்கள் தொகையின் அளவு மற்றும் மக்கள் தொகைக்கு எதிர்பார்க்கப்படும் வரம்பிற்குள் உள்ளது."

💓 DW fact check: Misleading (தவறான வழிநடத்தல்)

கத்தார் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரண்டு மில்லியன் மக்களில் ஆண்டுக்கு 1,500 இறப்புகள் ஒரு சாதாரண சராசரி இறப்பு விகிதம் ஆகும்.

முதலாவதாக, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) கூற்றுப்படி, கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொதுவான இறப்பு விகிதம் அவர்கள் சொந்த நாடுகளில் இருப்பதை விட குறைவாக உள்ளது என்று கூற வேண்டும் என்கிறது. உண்மையில், கத்தார் குடிமக்கள் மத்தியில் இறப்பு விகிதம் கூட கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விட அதிகமாக உள்ளது. (ஆதாராங்கல் 1st Comment இல்)

எவ்வாறாயினும், கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் அல்லது கத்தாரில் உள்ள பொது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல என்பதால், அத்தகைய புள்ளிவிவரங்கள் தவறாக வழிநடத்துகின்றன.

✅ கத்தாரில் குடியேறிய தொழிலாளர்கள் வருகையின் போது அடிப்படையில் ஆரோக்கியமாக உள்ளவர்கள்:

உதாரணமாக, சிறிய குழந்தைகள் மற்றும் வயோயோதிபர்களே அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட மக்கள்தொகைக் குழுக்களாகும்.

கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே உள்ள அந்த (குழந்தைகள், வயோதிபர்) விகிதத்தை, எந்த நாட்டின் பொது மக்களிடையேயும் ஒப்பிட முடியாதது.

மேலும், கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் பின்னணி அல்லது வேலை எதுவாக இருந்தாலும் AIDS/HIV, hepatitis B and C, syphilis or tuberculosis போன்ற உயிராபத்துள்ள தொற்றுநோய்கள் தொடர்பாக மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவை "இல்லை" என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விசா வழங்கப்படுகிறது.

இத்தகைய புள்ளிவிவரங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய பிறகு இறந்து போகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் கணக்கில் கொள்ளல்லை. உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில், 20-50 வயதுடைய ஆண்களிடையே சிறுநீரக செயலிழப்பு ஆபத்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலர் மத்திய கிழக்கில் பணிபுரிந்து திரும்பியவர்கள்.

வளைகுடா காலநிலையில் உள்ள
கடின உழைப்பு,
குறைந்த அளவு மற்றும் குறைந்த தரம் கொண்ட குடிநீருடன்
இணைந்து இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாமென நேபாளத்தில் உள்ள சுகாதார நிபுணர்களின் கருத்தாகும்.

🛑 Claim: "உலகக் கோப்பை மைதான கட்டுமானப் பணிகளில் வேலை தொடர்பான மூன்று மரணங்கள் மட்டுமே நடந்துள்ளன"

💓 DW fact check: Misleading

FIFA மற்றும் கத்தார் உலகக் கோப்பை ஏற்பாட்டுக் குழு ஆகிய இரண்டும் உலகக் கோப்பை கட்டுமானத் தளங்களில் அவர்கள் செய்த வேலையின் நேரடி விளைவாக மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்று வலியுறுத்திக் கூறுகின்றன.

FIFA மற்றும் கத்தாரின் அதிகாரபூர்வ வரைவிலக்கணப்படி "வேலை தொடர்பான இறப்புகள்" (FIFA and Qatar's official definition of "work-related deaths") 7 புத்தம் புதிய மைதானங்களுக்கான கட்டுமான தளங்களில் ஏற்பட்ட இறப்புகளைக் குறிக்கிறது, அத்துடன் கத்தார் கடந்த 10 வருடங்களில் கட்டமைத்த பயிற்சி வசதிகளையும் குறிக்கிறது.

இந்த மூவரில் இருவர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் Al Janoub Stadium in Al Wakrah யிலும் மற்றவர் பிரித்தானியாவை சேர்ந்தவர். Khalifa International Stadium in Al Rayyan யிலும் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படாத "வேலை தொடர்பான இறப்புகள்" என்ற வரையறையை விரிவுபடுத்தும்போது, அதிகாரிகள் மேலும் 37 இறப்புகளை ஒப்புக்கொண்டனர்.

உதாரணமாக, 2019 நவம்பர் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு எகிப்தியர் ஆகியோர் வேலையிலிருந்து தங்கள் தங்குமிடத்திற்கு பயணம் செய்யும் போது சாலை விபத்தில் இறந்தனர்.

எவ்வாறாயினும், உலகக் கோப்பையை கத்தாருக்கு வழங்கியது வளைகுடா நாட்டில் ஒரு உண்மையான கட்டுமான மறுமலர்ச்சியை கட்டவிழ்த்து விட்டது. இது வெறும் மைதானங்களுக்கு அப்பாற்பட்டது.

புதிய மோட்டார் பாதைகள்,
ஹோட்டல்கள்,
புதிய மெட்ரோ அமைப்பு,
விமான நிலைய விரிவாக்கம்
மற்றும் தோஹாவின் வடக்கே உள்ள லுசைலில் ஒரு முழுப் புதிய நகரம் உட்பட, போட்டியுடன் இணைக்கப்பட்ட முழு அளவிலான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டுமானத்தின் உச்சக்கட்டத்தில் கூட, குறிப்பிட்ட உலகக் கோப்பைத் தளங்களில் உண்மையில் அண்ணளவாக 30,000 தொழிலாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டதாக FIFA கூறுகிறது.

உத்தியோகபூர்வ அங்கீகரிக்கப்பட்ட மூன்று இறப்புகளை தவிர மற்ற கட்டுமானத் தளங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தள்ளுபடி செய்கிறது.

அதனால் உலகக் கோப்பை இல்லாமல் இருந்திருந்தால் நிகழ வாய்ப்பில்லை என கொள்ளக்கூடிய Shift நேரத்திற்கு வெளியே தங்களுடைய தங்குமிடங்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான ஆவணப்படுத்தப்பட்ட Caseகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, இதற்கு போதுமான விளக்கங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

The Guardian மற்றும் Amnesty International ஆகியவற்றின் ஆய்வின்படி, பங்களாதேஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி, கத்தார் மருத்துவர்கள் 70% இறப்புகளுக்கு சடுதியான இருதய-சுவாச கோளாறுகளால் *(acute cardio-respiratory failures) ஏற்படும் "இயற்கை மரணங்கள்" என்று கூறுகின்றனர்.

இருப்பினும், தொற்றுநோயியல் நிபுணர்களின் கருத்துப்படி, இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் மரணத்திற்கான அடிப்படை காரணங்கள் அல்ல. இருதய கோளாறு அதனை விளைவிக்கும் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வேறு காரணங்கள் இருக்கலாம். அதேபோல் சுவாச கோளாறுகள் ஒவ்வாமை அல்லது விஷத்தால் ஏற்படலாம்.

ஆனால் அத்தகைய விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. உண்மையில், 2022 ஆம் ஆண்டு ஜெர்மன் பொது ஒளிபரப்பு நிறுவனமான ARD இன் ஆவணப்படத் தொடரில், கத்தார் மருத்துவர்கள் இறப்புச் சான்றிதழ்களை அவ்வாறே நிரப்ப வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டிலேயே, கத்தார் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் சுயாதீன அறிக்கையில், உலகளாவிய சட்ட நிறுவனமான DLA Piper இந்த நடைமுறையை விமர்சித்து, "எதிர்பாராத அல்லது திடீர் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனைகளை செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்" என்று "கடுமையாக பரிந்துரைத்தது".

2021 இன் பிற்பகுதியில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) விபத்துக்கள் மற்றும் இறப்புக்கான காரணங்கள் பற்றிய போதுமான ஆவணங்கள் இல்லாததை விமர்சித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபையால் நேர்காணல் செய்யப்பட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, "சரியாக நிர்வகிக்கப்படும் சுகாதார நிலையங்களில்" வெறும் 1% Caseகளில் மட்டுமே மரணத்திற்கான துல்லியமான காரணங்கள் தீர்மானிக்கப்படவில்லை. மேலும் அவற்றுக்கு பிரேத பரிசோதனைகள் அரிதாகவே தேவைப்படுகின்றன.

சுமார் 85% Caseகளில், இறந்தவரின் சாட்சியங்கள் அல்லது அவர்களுடன் சம்பந்தப்பட்ட தெரிந்தவர்களின் வாய்மொழி பிரேதப் பரிசோதனைகள் (verbal autopsies) போதுமானது.

Human Rights Watch, Amnesty International மற்றும் Fairsquare போன்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுபோன்ற சாட்சிகளிடம் தொடர்ந்து பேசுகின்றன.

அவற்றின் அறிக்கைகளின் படி
வெப்ப பக்கவாதம்,
சோர்வு அல்லது
சிகிச்சை அளிக்கப்படாத சிறு நோய்களும் கூட பல திடீர் விவரிக்கப்படாத மரணங்களுக்கு (sudden unexplained deaths) மூல காரணம் என்று கூறுகின்றன.

💓 முடிவாக, 2022 உலகக் கோப்பையுடன் தொடர்புடைய இறப்புகளைக் குறிப்பிடும் புள்ளிவிவரங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தார்கள்,
எங்கு, எப்போது இறந்தார்கள்,
அவர்களின் இறப்புகள் வேலை தொடர்பானதாக விவரிக்க முடியுமா? இல்லையா?
என்பது உட்பட பல வரையறைகளைப் பொறுத்து மாறுபடும்.

எவ்வாறாயினும், கத்தாரின் சொந்த உத்தியோகபூர்வ தரவுகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, ஒரு உறுதியான முடிவை உறுதி செய்ய இயலாது.

இது ஏன் கத்தார் அதிகாரிகளால் நம்பகமான தகவலை வழங்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.

துரதிர்ஷ்டவசமாக கத்தார், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் கருத்துத் தெரிவிக்க பல கோரிக்கைகள் விடுக்கப்டப்பட்ட நேரத்தில் பதிலளிக்கப்படவில்லை.

இந்த உண்மைச் சரிபார்ப்பு முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது.
DW fact check இல் ஆங்கிலத்தில் வெளியானது.
தமிழில்: Ziyad Aia

🛑 Disclaimer: இப்பதிவு நேரடி மொழிபெயர்ப்பு மாத்திரமே. எனது சொந்த கருத்துக்கள் அல்ல. Source link -

-Ziyad Aia
கட்டார் உலகக்கிண்ண கட்டுமான பணிகளின் போது 6500 முதல் 15000 பேர் வரை உயிரிழந்தார்களா? மொத்தம் 3 பேர் தான் என்கிறது கத்தார் அரசு? எது உண்மை? கட்டார் உலகக்கிண்ண கட்டுமான பணிகளின் போது 6500 முதல் 15000 பேர் வரை உயிரிழந்தார்களா? மொத்தம் 3 பேர் தான்  என்கிறது கத்தார் அரசு? எது உண்மை? Reviewed by Madawala News on November 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.