அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் நகரும் - பல பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.



ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் தென் மேற்குத் திசையுடன் இணைந்ததாக யாழ்ப்பாணத்திற்கு வடக்கு ‐ வடகிழக்குத் திசையில் சுமார் 410 km தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் படிப்படியாக நலிவடைவதுடன் மேற்கு ‐ வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட பகுதி மற்றும் புதுச்சேரி கரைகளையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆனபடியினால் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்கு கடல் பிராந்தியத்திற்கும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.


கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 40 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் நகரும் - பல பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கம் நகரும் - பல பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். Reviewed by Madawala News on November 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.