தனுஷ்கவின் பிணைக்காக 150,000 டொலர்களை தனியாக செலுத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள பெண்!
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதில்ககவுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வசதி வாய்ந்த இலங்கையர்கள் உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.


அதற்கமைய, மெல்பர்னில் உள்ள இலங்கை பெண்ணொருவர் தனுஷ்கவின் பிணைக்காக செலுத்தவேண்டிய 150,000 டொலர்களை தனியாகச் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தனுஷ்கவுக்கும் அந்த பெண்ணுக்குமான உறவுமுறைகள் குறித்தோ, அல்லது தனுஷ்கவின் ரசிகையா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.


அத்தோடு, அவுஸ்திரேலியாவில் உள்ள தனுஷ்க குணதிலக்கவுக்கு தங்குமிட வசதிகளையும் அங்குள்ள இலங்கையர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக அறியமுடிகிறது.


மேலும், தனுஷ்கவின் சட்டத்தரணிக்கான கட்டணத்தையும் இவர்களே செலுத்திவருவதாகவும் கூறப்படுகிறது

தனுஷ்கவின் பிணைக்காக 150,000 டொலர்களை தனியாக செலுத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள பெண்! தனுஷ்கவின் பிணைக்காக 150,000 டொலர்களை தனியாக செலுத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள பெண்! Reviewed by Madawala News on November 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.