ஆதரவு 121 வாக்குகள் - எதிராக 84 வாக்குகள்.. நிறைவேறியது 2023 பட்ஜெட்



2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.


இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.


இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அடுத்தாண்டுக்கான வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.


அதனையடுத்து வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. இன்று 7ஆவது நாளாகவும் விவாதம் இடம்பெற்றதோடு, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.


வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதம் நாளை (23) முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதரவு 121 வாக்குகள் - எதிராக 84 வாக்குகள்.. நிறைவேறியது 2023 பட்ஜெட் ஆதரவு  121 வாக்குகள் -  எதிராக 84 வாக்குகள்.. நிறைவேறியது 2023 பட்ஜெட் Reviewed by Madawala News on November 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.