TV, லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பொருட்களை போலி ஒன்லைன் வியாபாரம் ஊடாக 56 இலட்சம் ரூபா மோசடி செய்தவர் கைது... ( ஏமாற்றப்பட்டவர்கள் சுமார் 100 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு)



இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை மலிவான விலையில் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 23 வயதான ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இணைய தள வடிவமைப்பாளர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.


சந்தேகநபர் புதன்கிழமை (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் ஆய்வக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


அவர் தொலைக்காட்சி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்வதாகக் கூறி முகநூல் பதிவுகள் ஊடாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட போலி வியாபாரத்தின் மூலம் 5.6 மில்லியன் ரூபா சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 100 பொலிஸ் நிலையங்களில் போலி வியாபாரம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையான தனது 12 நண்பர்களுடன் இணைந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
TV, லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பொருட்களை போலி ஒன்லைன் வியாபாரம் ஊடாக 56 இலட்சம் ரூபா மோசடி செய்தவர் கைது... ( ஏமாற்றப்பட்டவர்கள் சுமார் 100 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு) TV, லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பொருட்களை  போலி ஒன்லைன் வியாபாரம் ஊடாக  56 இலட்சம் ரூபா மோசடி செய்தவர் கைது... ( ஏமாற்றப்பட்டவர்கள் சுமார் 100 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு) Reviewed by Madawala News on October 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.