கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது ; மத்திய வங்கி ஆளுநர்



தற்போதைய பணவீக்க நிலைமையிலிருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வரிச் சீர்திருத்தங்கள், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்றவை பணவீக்க சூழ்நிலையிலிருந்து விடுபட எடுக்கப்பட்ட சில கடினமான முடிவுகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய வரிக் கொள்கையை குறைந்தது ஒரு வருடத்திற்காவது நடைமுறைப்படுத்தினால், அடுத்த வருடத்தில் இருந்து எதிர்பார்த்தபடி பொருளாதாரம் நிலைபெறுமானால், வரி வருமானம் நிச்சயமாக நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

வரி சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த ஏனைய சீர்திருத்தங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது ; மத்திய வங்கி ஆளுநர் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது ; மத்திய வங்கி ஆளுநர் Reviewed by Madawala News on October 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.