நுரைச்சோலை மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்து இருந்தாலும், மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது.



நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயங்க ஆரம்பித்தாலும் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அதற்கமைய அறிவிக்கப்பட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற மின் வெட்டு
தொடரும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரைச்சோலை
அனல்மின் நிலையத்தில்
3ஆம் மின் பிறப்பாக்கியில்
ஏற்பட்ட கோளாறு
சரி செய்யப்பட்டு,
மீண்டும் தேசிய மின்
கட்டமைப்புடன்
இணைக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சனிக்கிழமை
(01) தெரிவித்திருந்தார்.

அலகு 1 மற்றும் அலகு 3 ஆகிய இரண்டும் முழு திறனில் இயங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர், 2ஆம் அலகின் பராமரிப்பு பணிகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார். 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்கு வழங்கும் குறித்த மூன்று மின் பிறப்பாக்கிகளில் இரண்டு பிறப்பாக்கிகள் செயற்பட ஆரம்பித்துள்ளமையால்
தேசிய மின் கட்டமைப்புக்கு
600 மெகாவோட் மின்சாரம்
கிடைக்கப்பெறும் என்பது
குறிப்பிடத்தக்கது.


இதேவேளை,
எரிபொருளின் தரம்
தொடர்பில் கிடைக்கப்பெற்ற
முறைப்பாடுகள்
அதிகரித்துள்ளதையடுத்து
ஆரம்பிக்கப்பட்ட எரிபொருள்
நிரப்பு நிலையங்களை
சோதனை செய்யும்
நடவடிக்கைகள் தொடரும்
என பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்து இருந்தாலும், மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது. நுரைச்சோலை மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்து இருந்தாலும்,  மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியாது. Reviewed by Madawala News on October 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.