கல்முனை விகாராதிபதியின் பிணைக்கு கையொப்பம் இட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல்.



சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) பிணை வழங்கியது.


இருப்பினும், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நேற்று முன்தினம் (04) காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.


மூன்று தனித்தனி வழக்குகளுக்காக தலா மூன்று பேரின், ஐந்து இலட்சம் படி, ஒன்பது பேரின் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிணைக்கு ஒப்பமிடுவதில் ஏற்பாட்டாளராக இருந்து செயற்பட்டும், ஒப்பமிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், சிறைச்சாலையிலிருந்து தேரரை அழைத்து வந்து விகாரையில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, விகாராதிபதி பிணைக்காக கையொ
ப்பம் இட்டவர்கள் இரண்டு பேரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கல்முனை 01 C பகுதியில் அமைந்துள்ள, முஸ்லிம் குடியேற்ற தொடர்மாடி பகுதிக்கு முன்னால் உள்ள, மயில்வாகனம் முத்துலெட்சுமி, ஹர்சன் டி சில்வா ஆகியோ
ரின் வீடுகளின் மீதே வாள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


அதேவேளை, விகாராதிபதியின் பிணை மனுவை எதிர்த்து, கல்முனை நீதாவன் நீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை கொண்ட குழு, பொலிஸாருடன் வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்றம் விகாராதிபதிக்கு பிணை வழங்கியது. கல்முனை விகாராதிபதி, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில், உறுப்பினர் ராஜனுடன் உண்ணாவிரதம் இருந்து, கல்முனை தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை விகாராதிபதியின் பிணைக்கு கையொப்பம் இட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல்.  கல்முனை விகாராதிபதியின் பிணைக்கு கையொப்பம் இட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல். Reviewed by Madawala News on October 06, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.