மாமாவின் இறுதிக்கிரியைகளில், மரண வீட்டில் மரம் முறிந்து விழுந்து மருமகன் மரணம்.மாமாவின்  இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து

பலியான  சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 


நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


கம்பளை - அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த  76 வயதான இராமகிருஷ்ணன்  இயற்கை மரணம் எய்திய நிலையில், அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவிருந்தன.


 சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாமாவின் இறுதிக்கிரியைகளில், மரண வீட்டில் மரம் முறிந்து விழுந்து மருமகன் மரணம். மாமாவின்  இறுதிக்கிரியைகளில், மரண வீட்டில் மரம் முறிந்து விழுந்து மருமகன் மரணம். Reviewed by Madawala News on October 19, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.