நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் போதைப்பொருள் ஆக்கிரமித்துள்ளது - அரசியல் பலத்தால் பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் ; பாராளுமன்றில் தெரிவிப்பு



நாட்டில் உள்ள அனைத்து
பாடசாலைகளையும்
போதைப்பொருள்
ஆக்கிரமித்துள்ளது.


மாணவர்களில் பெரும்பாலானோர்
ஏதாவதொரு வழிமுறையில்
போதைப்பொருள்
பாவனைக்கு ள்ளாகியுள்ளனர்.



எனவே மாணவர்களின்
எதிர்காலத்தை கருத்திற் கொண்டு
போதைப்பொருள் பாவனை
ஒழிப்பு தொடர்பில் அரசு விசேட
கவனம் செலுத்த வேண்டும் என
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான
ரோஹினி குமாரி கவிரத்ன
நேற்று (19) பாராளுமன்றத்தில்
கோரிக்கை விடுத்தார்.



கொழும்பு மாவட்டத்தில்
உள்ள பாடசாலைகள்
மாத்திரமல்ல நாட்டில் உள்ள
அனைத்து பாடசாலைகளையும்
போதைப்பொருள்
ஆக்கிரமித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரம்
பாடசாலைகளையும் இளம்
தலைமுறையினரையும் இலக்காக
கொண்டதாக மாறிவிட்டது.



போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு
புனர்வாழ்வு வழங்க நடைமுறைக்கு
சாத்தியமான திட்டங்கள்
வகுக்கப்பட வேண்டும்.
பாடசாலை மட்டத்தில்
போதைப்பொருள் தடுப்பு விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட வேண்டும்.


அரசியல் மற்றும் நிதி பலத்தால்
பிரதான போதைப்பொருள்
வியாபாரிகள் தப்பித்துக்
கொள்கிறார்கள்.

ஆனால்
போதைப்பொருள் பாவனை
அல்லது போதைப்பொருளுக்கு
அடிமையானவர்கள்
சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.


சிறைச்சாலையில் உள்ள
பெண்களிடம் உள்ள ஐந்து
வயதுக்கு குறைவான
பிள்ளைகளின் பாதுகாப்பு
குறித்து விசேட கவனம் செலுத்த
வேண்டும்.

இந்தப் பிள்ளைகளின்
பிள்ளை பருவம் சிறைச்சாலைக்குள்
நிறைவு பெறுதால் அந்த பிள்ளை
சமூகத்திற்கு எவ்வாறான
நிலையில் செல்லும் என்பது
சந்தேகத்துக்குரியது.

அத்துடன்
சிறுவர்களிடம் சாட்சியம் பெறும்
போது பொலிஸார் ஊடகங்களை
அழைத்து செல்கிறார்கள். எனவே
சிறுவர் மற்றும் ஊடகங்கள்
தொடர்பிலும் சட்டங்கள்
இயற்றப்பட வேண்டியது
அவசியம் என்றார்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் போதைப்பொருள் ஆக்கிரமித்துள்ளது - அரசியல் பலத்தால் பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் ; பாராளுமன்றில் தெரிவிப்பு  நாட்டில் உள்ள அனைத்து  பாடசாலைகளையும்  போதைப்பொருள்  ஆக்கிரமித்துள்ளது - அரசியல் பலத்தால்  பிரதான போதைப்பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் ; பாராளுமன்றில் தெரிவிப்பு Reviewed by Madawala News on October 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.