டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கப் படும் ; நம்பிக்கை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர்



 கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்,

இதற்கான சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் குறித்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்குமென  எதிர்பார்ப்பதாககவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். 


வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் இறக்குமதியில் நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது. 


மருந்துப்பொருட்களின் இறக்குமதியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுதேச மருத்துவத்துறைக்கு தேவையான ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டொலர்  நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்  கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. 


இதற்கு இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் அமைச்சரவையில் நிலவுகின்றன. எவ்வாறு இருப்பினும் இந்த சட்டமூலம் குறித்து உரிய சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கிறோம். 

அவ்வாறு அங்கிகாரம் கிடைத்தாலும் கூட அது மருத்துவ பயன்பாட்டுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றார்.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கப் படும் ; நம்பிக்கை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர்  டொலர்  நெருக்கடிக்கு தீர்வு காண, கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கப் படும் ; நம்பிக்கை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர் Reviewed by Madawala News on October 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.