சவூதி அரேபியாவை ஒர் நவீன முன்மாதியான சுபீட்சத்திக்கு கட்டியெழுப்ப உள்ளாா்கள் - பெண்கள் முகம் மூடுதல், அபாயா அனிதல் போன்ற கட்டாயங்கள் தளா்த்தப்பட்டு வருகின்றன ; அமைச்சர் அலி சப்ரி



(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டில் வாழும் நாம் ஏழைகள் எனச் சொல்லிக் கொண்டு பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் சம்பிரதாயத்தினை விட்டு . நாமும் முன்னேருதல் வேண்டும். அதற்கு நமக்கு ஒரே வழி கல்வியில்  முன்னேறுதல் வேண்டும். அதற்காக நமது பிள்ளைகளை இன்றிலிருந்தே நாம்  தயாா்படுத்துதல் வேண்டும். என அமைச்சா் அலி சப்றி தெரிவித்தாா்


கொழும்பு 10 மருதானை அல்ஹிதயா பாடசாலையின் 92வது ஆண்டு விழாவும் ஸ்மாட் வகுப்பறை ஒன்றின் திறப்பு வைபவம் இன்று 21 வெள்ளிக்கிழமை அல் ஹிதாயா பாடசாலையின் புர்ஹார்தீன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்றி கலந்து கொண்டாா்.

இந் நிகழ்வுகள் கல்லுாாியின் உப அதிபா் திருமதி ஏ.ஏ.சி.கே. அபேசிங்க தலைமையில் நடைபெற்றது. கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு அமைச்சரின்  வேண்டுகோலின் படி கல்வியமைச்சு இக் கல்லுாாிக்கு ஸ்மாட் கனனி வகுப்பறை ஒன்றை நிறுவி இருந்தது  குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே   வெளிநாட்டு அமைச்சா் அலி சப்றி  மேற்கண்டவாறு தெரிவித்தாா். 

அவர் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது -


 யப்பான்  நாட்டில்  ஏழை ஒருவருக்கு ஒருபோதும் உணவுக்காக மீனை வழங்கமாட்டாா்கள் மீனை அவன் நாளாந்தம் தேடிப் பிடித்து உண்பதற்காக   ஒர் மீன் பிடிக்கும் துண்டிலையே வழங்குவாா்கள்.  அதனால் தான் அந்த நாடு தற்பொழுது வளா்ச்சி கண்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன் கொரியா நாடு மிகவும் ஏழ்மையாக இருந்துவந்த  நாடு தற்பொழுது அந் நாடு பொருளாதாரத்தில் உலகில் உள்ள நாடுகளில் 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலும் கூட 1991ஆம்  ஆண்டு திறந்த பொருளாதாரத்தினை கட்டி எழுப்பினாா்கள். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அதனைக் கட்டிகட்டியெழுப்பினாா். அரசுகள் மாறினாலும் அவா்களது கல்வி, பொருளாதார முறைமைகள் அங்கு மாறவில்லை. அதனாலேயே அவா்கள் 5வது இடத்தில் உள்ளாா்கள்.  நமது நாட்டில் காலத்திற்கு காலம் அரசியல் ஆட்சிகள் முறைமைகள் மாறும் போது நமது தேவைக்காக திட்டங்களை மாற்றிவருகின்றோம்.

அன்மையில் இரண்டு முறை சவுதி அரேபியாவி்ன் வெளிநாட்டு அமைச்சரைச் நான் சந்தித்தேன்.


 அவா்கள் தற்பொழுது சவுதி அரேபியாவினை எதிா்காலத்திட்டத்திற்காக 4 முன்மாதிரித் திட்டங்களை  அறிமுகப்படுத்தி அந்த நாட்டினைக்  கட்டியெழுப்ப உள்ளாா்கள்.


அவர்கள் நாட்டில் அடுத்த சில வருடங்களுக்குள் அங்கு பெற்றோல்  அறவே இல்லாமல் போகிவிடும். அதற்காக சவூதி அரேபியாவை  ஒர் நவீன முன்மாதியான சுபீட்சத்திக்குச்  சவுதி அரேபியாவினைக் கட்டியெழுப்ப உள்ளாா்கள். 


அங்கு பெண்கள் தாமகாவே  சொந்தக் காலில் நிற்பதற்காக அங்கு அவா்களுக்கு  உரிமைகளை வழங்கி வருகின்றாா்கள். 


பெண்கள் முகம் மூடுதல், அபாயா  அனிதல் போன்ற  கட்டாயங்கள் தளா்த்தப்பட்டு வருகின்றன.  அவா்கள் சுயமாகவே தனது உணவு, பொருளாதாரம். கல்வியைக் கற்றல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளாா்கள்.  இஸ்லாத்தின் மாா்க்கத்தின் சில கட்டாயத் தளா்வுகளை தளா்த்தி வருகின்றாா்கள். மற்றும் அங்கு சியா ,சுன்னி முஸ்லிம் என்ற பிளவுகளை தடுத்து ஒற்றுமையினை கட்டியெழுப்பி  அங்கு  தேசிய ஒன்றுமையை கொண்ட ஒர் நாடாக எதிா்காலத்தில்  சவுதி  கட்டி எழுப்பவுள்ளதாக சவுதி வெளிநாட்டு அமைச்சா் என்னிடம் தெ்ரிவித்தாா்.

எமது நாட்டில்  பொருளாதாரக்  கஸ்டத்திற்காக இலங்கை மத்திய வங்கியின் இலங்கைப்  பணத்தினை அச்சடித்து வெளியிட்டாதாலே   நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். டொலரின் பெருமதி நுாற்றுக்கு நுாறு வீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஒன்றரை வருடங்களாவது நாம் மேலும் பொருளாதாரத்தில் கஸ்டங்களை அனுபவிக்க  வேண்டிவரும். ஆகவே தான் இந்த நாட்டில் மதவாதம், இனவாதம், என்ற பாகுபாடுகள் இல்லாமல் சகலரும் ஒன்றினைந்து ஒரு கொள்கையின் கீழ் நாம் இந்த நாட்டினைக் கட்டியெழுப்புதல்  வேண்டும்

இக் கல்லுாாியை கட்டியெழுப்புவதற்காக பழைய மாணவா்கள் சங்கம்  முன் வந்துள்ளது. பழையமாணவ சங்கத்தின் முன்னால் தலைவா் புர்கானுத்தின் ஹாஜியாா் இன்றும் அவா் ஒரு அல் ஹிதாய பழைய மாணவன் என்ற நிலையில் இக் கல்லுாாிக்காக  அவரது சொந்தப் பணத்தினை செலவளித்து கூட்ட மண்டபமொன்றினை நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா். அதற்காக நாம் நன்றியைச் செலுத்துகின்றோம்.  .


 இதே போன்று கொழும்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் பாடசாலைகளது கல்வி வளா்ச்சிக்கும்  பழைய மாணவா்கள் தமது பொருளாதாரம் .மற்றும் உழைப்புக்களை  செலவழித்து எதிா்கால சமுகத்திற்காக தாம் கற்ற கல்லுாாியைக் கட்டியெழுப்பும் விடயத்தில் முன்நின்று உழைக்கின்றனா. இவ்விடயம்  சாலச் சிறந்தாதாகும். . எனவும் வெளிநாட்டு அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.

சவூதி அரேபியாவை ஒர் நவீன முன்மாதியான சுபீட்சத்திக்கு கட்டியெழுப்ப உள்ளாா்கள் - பெண்கள் முகம் மூடுதல், அபாயா அனிதல் போன்ற கட்டாயங்கள் தளா்த்தப்பட்டு வருகின்றன ; அமைச்சர் அலி சப்ரி சவூதி  அரேபியாவை  ஒர் நவீன முன்மாதியான சுபீட்சத்திக்கு கட்டியெழுப்ப உள்ளாா்கள் -   பெண்கள் முகம் மூடுதல், அபாயா  அனிதல் போன்ற  கட்டாயங்கள் தளா்த்தப்பட்டு வருகின்றன ; அமைச்சர் அலி சப்ரி Reviewed by Madawala News on October 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.