பொதுமக்களுடன் போராட்ட களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... வீதியில் அமர்ந்து போராட்டம்.


 

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்திற்கு உரிய நேரத்தில் உரம் வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலனறுவை விவசாயிகள் இணைந்து இன்று காலை பொலனறுவையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டு வீதியில் அமர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.


ஒரு கிலோ கோதுமைக்கு 150 ரூபா உத்தரவாத விலையை வழங்குமாறும் கோரி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடன் போராட்ட களத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... வீதியில் அமர்ந்து போராட்டம். பொதுமக்களுடன் போராட்ட களத்தில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...  வீதியில் அமர்ந்து  போராட்டம். Reviewed by Madawala News on October 03, 2022 Rating: 5

1 comment:

  1. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டு - hee hee hee hee

    ReplyDelete

Powered by Blogger.