சிறைச்சாலை சமையலறை அண்டா பாத்திரத்தில் தவறி விழுந்த கைதி மரணம். #இலங்கை



அங்குனுகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


கைதிகளுக்கு இறைச்சி தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெரிய சமையல் பாத்திரத்தில் விழுந்ததில் ஏற்பட்ட தீக்காயங்களினால் கைதி உயிரிழந்துள்ளார்.


2001ஆம் ஆண்டு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, 25 வருட சிறைவாசத்தின் பின்னர் 2028ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட இருந்தார் .


கைதியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,


தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.


கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளின் நிலைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலை சமையலறை அண்டா பாத்திரத்தில் தவறி விழுந்த கைதி மரணம். #இலங்கை சிறைச்சாலை  சமையலறை  அண்டா பாத்திரத்தில் தவறி விழுந்த கைதி மரணம்.  #இலங்கை Reviewed by Madawala News on October 07, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.