ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அரசாங்கத்தின் செலவில் சமச்சீர் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


உலக குழந்தைகள் மற்றும் முதியோர் தினம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


​​சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஒப்புதலுடன் சமச்சீர் உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாககும் தெரிவித்தார்.


மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேலதிக மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


குழந்தைகளின் இன்பமான குழந்தைப் பருவத்தையும், நாட்டின் நலனையும் காக்க பெரும் தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தை கவனிப்பது நமது கடமை. இது நமது கலாசாரத்துடன் தொடர்புடையது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


உணவு, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு, தூக்கம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவை குழந்தைகளின் தேவைகளில் சில மாத்திரமே.


இந்த வசதிகளை உறுதி செய்வதற்கு கலாசார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


இந்த தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தை தவிர அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் பொறுப்பு என்பது எனது கருத்து. பெரியவர்கள் வாழும் சமகால உலகம் குழந்தைகள் பார்க்கும் உலகம் அல்ல. இது மிகவும் எளிமையானது மற்றும் மென்மையானது.


அவர்கள் ஆர்வத்திற்காக தாகம் கொள்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கென ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்க உறுதிசெய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாகப் பார்த்தால், சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகம் மிகவும் மாறுபட்டு இருப்பது புலனாகிறது.


இது குறித்து ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் சரியான அளவு கலோரிகள் அடங்கிய சரிவிகித மற்றும் சத்தான உணவைப் பெறுவதை உறுதிசெய்வது அரச தலைவர் என்ற முறையில் எனது கடமையாகும்.


இந்த மண்ணின் எதிர்கால சந்ததியினருக்காக ஒரு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே இந்த தருணத்தில் எனது நோக்கம்.


நான் முன்வைத்த கொள்கை அறிக்கையின் அடிப்படையில், ஏழ்மை நிலையில் உள்ளோர் மற்றும் சலுகை பெற்ற பிரிவினரின் பராமரிப்புக்கு தேவையான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் கருணையுடன் கவனித்துக் கொள்ளப்படும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on October 01, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.