சாதனை மாணவர்கள் மாளிகைக்காடு சபீனாவில் பாராட்டி கௌரவிப்பு !




நூருல் ஹுதா உமர்
கடந்த ஆண்டு வெளியான பெறுபேறுகள் அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபகமும், சிறுவர்களை ஊக்கப்படுத்தும் சிறுவர்தின நிகழ்வுகளும் கல்முனை கல்வி வலய காரைதீவு கோட்டத்தை சேர்ந்த மாளிகைக்காடு கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி தலைமையில் இரு கட்டங்களாக திங்கட்கிழமை இடம்பெற்றது.

"சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்" எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்ற போதே மேற்கூறிய இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவினால் கடந்த ஆண்டு வெளியான பெறுபேறுகள் அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியெய்திய மாணவர்கள் இந்நிகழ்வில் வைத்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் கல்வி மற்றும் பாலியல் தொற்றுநோய்ப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம்.தில்ஷாத் கலந்து கொண்டார்.

மேலும் கௌரவ அதிதியாக ஆசிரியர் ஆலோசகர் எம் எம் ரபிக் மற்றும் விசேட அதிதிகளாக அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், எஸ்.எல்.டி.பீ. தேசிய பிரச்சார செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், இ.ஒ. கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான எஸ் ஜனுஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன்  மற்றும் இன்னும் பல அதிதிகளும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பிரதம அதிதியாக உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் எம். இப்ராஹிம் கலந்து கொண்டார்.
 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 

சாதனை மாணவர்கள் மாளிகைக்காடு சபீனாவில் பாராட்டி கௌரவிப்பு ! சாதனை மாணவர்கள் மாளிகைக்காடு சபீனாவில் பாராட்டி கௌரவிப்பு ! Reviewed by Madawala News on October 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.