பாடசாலை நாளில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களை திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து சென்றது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு அவதானம்.



முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்கு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.


வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ்வாறு பாடசாலை நாளில் மாணவர்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு படம் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெறறோரின் சம்மதத்துடனேயே மாணவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 1500 ரூபா வீதம் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

ஆயினும் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டமையால் வடமாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .
பாடசாலை நாளில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களை திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து சென்றது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு அவதானம். பாடசாலை நாளில்  50 இற்கும் மேற்பட்ட மாணவர்களை  திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து சென்றது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு அவதானம். Reviewed by Madawala News on October 19, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.