இலங்கையில் வாகனங்களின் விலையில் சரிவு.. 5 முதல் 10 இலட்சம் வரை விலைகள் குறைந்தன.இலங்கையில் வாகனங்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்திய ஆல்ட்டோ காரின் விலை தற்போது 25 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது.
ஜப்பானிய ஆல்ட்டோ கார் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 46 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், கடந்த காலங்களில் 65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வேகன் ஆர் கார், 57 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. அக்வா கார் ஒன்றும் கடந்த காலத்தில் 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, தற்போது 73 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாகன விலை குறைப்பு தொடர்பில் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்
இலங்கையில் வாகனங்களின் விலையில் சரிவு.. 5 முதல் 10 இலட்சம் வரை விலைகள் குறைந்தன. இலங்கையில்  வாகனங்களின் விலையில் சரிவு..  5 முதல் 10 இலட்சம் வரை விலைகள் குறைந்தன. Reviewed by Madawala News on October 01, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.