நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழும் நிலையில், திருடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்கத் தயாராகி வருகிறார்கள்.நாட்டைத் தனித்தனியாக கொள்ளையடித்த குழுக்கள் தற்போது ஒன்று சேர்ந்து நாட்டை கொள்ளையடிக்க ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனித்தனியாகச் செய்த திருட்டுகளும்,தனித்தனியாகச் செய்த மோசடிகளும், தனித்தனியாக நாட்டை வங்குரோத்தாக்கியதையும் இப்போது ஒன்று சேர்ந்து வக்குரோத்தாக்க ஒருவரையொருவர் தயார்படுத்தி ஒன்றிணைய முயற்சித்து வருகின்றனர் எனவும், இந்நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு மேல் அசௌகரித்திற்குட்படுத்திய கும்பலை இந்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தத் திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்நாட்டு மக்களும் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனை தேர்தல் தொகுதி அமைப்பாளர் லக்‌ஷமன் செனவிரத்ன இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு பெரும்திரளான ஆதரவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது மீண்டும் டீல்கார மோசடி கும்பல் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்கத் தயாராக வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக ஒன்றிணையுமாறு ஒருவர் அழுது கொண்டே பிச்சை எடுப்பது போல கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு அழுகின்ற அவருக்கு இந்நாட்டில் இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் இன்னும் அழுது கொண்டே வாழ்கிறார்கள் என்பது புரியவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தங்கள் குழந்தைகளுக்கு சிறிதளவு பால் மாவைக்கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அழுகிறார்கள் எனவும்,உரங்கள் இன்மையால் விவசாயிகள் அழுகிறார்கள் எனவும், எதிர்காலமின்றி இளைஞர் தலைமுறையின் குரல் எழுப்புவதாகவும்,பொதுவாக 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழ்கிறார்கள் என்றும் அது அவர்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழும் நிலையில், திருடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்கத் தயாராகி வருகிறார்கள். நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழும் நிலையில், திருடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்கத் தயாராகி வருகிறார்கள். Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5

5 comments:

 1. වෙළෙඳ අමාත්‍යවරයා වශයෙන් සිටියදී සතොස ආයතනයේ සේවකයින් පිරිසක් සිය රාජකාරීවලින් ඉවත් කොට දේශපාලන කටයුතුවල යෙදවීම තුළින් රුපියල් ලක්ෂ 5‍9කට අධික මුදලක් රජයට පාඩු කළේ යැයි චෝදනා කොට හිටපු අමාත්‍ය ජොන්ස්ටන් ප්‍රනාන්දු මහතා ඇතුළු විත්තිකරුවන් තුන්දෙනෙකුට අද (10) කොළඹ මහාධිකරණය හමුවේ අධිචෝදනා භාරදුන්නේය.

  ReplyDelete
 2. අන්තර් විශ්වවිද්‍යාලයීය ශිෂ්‍යබල මණ්ඩලයේ කැඳවුම්කරු වසන්ත මුදලිගේ ඝාතනය කරන බවට සඳහන් නිර්නාමික ලිපියක් ආදිවාසි නායක ඌරුවරිගේ වන්නිලඇත්තන්ට ලැබී තිබේ. = > "පෙති ගහලා මරණවා කියලා තියෙනවා. වන්නිලඇත්තන්ට කියලා තියෙනවා පෙනී ඉන්න එපා කියලා. ලියුම කුරුණෑගලින් ඇවිල්ලා තියෙන්නේ."

  ReplyDelete
 3. note the point => ලියුම කුරුණෑගලින් ඇවිල්ලා තියෙන්නේ."

  ReplyDelete
 4. https://sinhala.adaderana.lk/news/173517/%E0%B6%A2%E0%B7%9C%E0%B6%B1%E0%B7%8A%E0%B7%83%E0%B7%8A%E0%B6%A7%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%A7-%E0%B6%85%E0%B6%B0%E0%B7%92%E0%B6%A0%E0%B7%9D%E0%B6%AF%E0%B6%B1%E0%B7%8F-%E0%B6%B7%E0%B7%8F%E0%B6%BB%E0%B6%AF%E0%B7%99%E0%B6%BA%E0%B7%92

  ReplyDelete
 5. https://sinhala.adaderana.lk/news/173465/%E0%B6%86%E0%B6%AF%E0%B7%92%E0%B7%80%E0%B7%8F%E0%B7%83%E0%B7%92-%E0%B6%B1%E0%B7%8F%E0%B6%BA%E0%B6%9A%E0%B6%BA%E0%B7%8F%E0%B6%A7-%E0%B6%B1%E0%B7%92%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%B1%E0%B7%8F%E0%B6%B8%E0%B7%92%E0%B6%9A-%E0%B6%BD%E0%B7%92%E0%B6%B4%E0%B7%92%E0%B6%BA%E0%B6%9A%E0%B7%8A

  ReplyDelete

Powered by Blogger.