அப்டேட் >> குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு



குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 
பலி எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.


குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகினர். சில நூறு பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


நேற்று மாலை  விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர்.

சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

 இன்னும் ஆற்றில் நூற்றுக் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். இந்தப் பாலம் அண்மையில் தான் சீரமைக்கப்பட்டது.


 அக்டோபர் 26 ஆம் தேதி தான் இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில்,


இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷங்கவி மோர்பி பகுதிக்கு விரைந்துள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.



இதற்கிடையில் மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.


இதுதவிர பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



அப்டேட் >> குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு அப்டேட் >> குஜராத் பாலம் இடிந்து விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு Reviewed by Madawala News on October 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.