மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு.



 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை

காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். 


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


இலங்கைக்கு தென் மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காணப்படுகின்ற வினைத்திறன் மிக்க மேகக் கூட்டங்களின் காரணமாக பேருவலை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய வேகத்தில் திடீரென  காற்று அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on October 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.