விஹாராதிபதி தேரரை கொன்ற சம்பவத்தில் விமான நிலையத்தில் கைதான இளம் தேரரும், துபாய் காதலியும்.. விசாரணையில் வெளியான தகவல்கள்.
எம்.இஸட். ஷாஜஹான்
சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை உத்தரவிட்டார்.
ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபராவார்.
சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அவர், விஹாராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுவிட்டு, டுபாயில் உள்ள தனது காதலியிடம் (முஸ்லிம்) செல்வதற்கு முயன்ற போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விஹாராதிபதியை படுகொலைச் செய்வதற்காக காதலியின் உறவினர்கள் சிலரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
விஹாராதிபதி தேரரை கொன்ற சம்பவத்தில் விமான நிலையத்தில் கைதான இளம் தேரரும், துபாய் காதலியும்.. விசாரணையில் வெளியான தகவல்கள்.
Reviewed by Madawala News
on
September 18, 2022
Rating:

(முஸ்லிம்) indha waarthai ivvidathil anaawasiyamaanadhu
ReplyDelete