மதுபோதையில் பாடசாலை வந்த உப அதிபர்... மது போதையிலும் கடமையை நிறைவேற்றியவர் இறுதியில் சிக்கியது இவ்வாறு தான்.கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உப அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் மது போதையில் இருந்த போதும் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.


எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

ஆனால் குறித்த உதவி ஆசிரியரால் அதனை இயக்க முடியாமையினாலும், தனது உடல் கட்டுப்பாட்டினை இழந்தமையினாலும் கீழே விழுந்துள்ளார்.


இந்நிலையில் குறிதத பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் கீழே விழுந்த ஆசிரியரை தூக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உப அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் பாடசாலை வந்த உப அதிபர்... மது போதையிலும் கடமையை நிறைவேற்றியவர் இறுதியில் சிக்கியது இவ்வாறு தான்.  மதுபோதையில் பாடசாலை வந்த உப அதிபர்...  மது போதையிலும் கடமையை நிறைவேற்றியவர் இறுதியில் சிக்கியது இவ்வாறு தான். Reviewed by Madawala News on September 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.